கோவை போத்தனுர் அருகே பொதுமக்கள் வழிபட்டு வரும் முத்து மாரியம்மன் கோவிலை பாதுகாத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

முத்து மாரியம்மன் கோவிலை அகற்ற வேண்டும் என்று பாரத் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் மற்றும் அவரின் குடும்பத்தார் இடையூறு செய்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை போத்தனுர் அருகே பொதுமக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலை பாதுகாத்திட வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,

கோவை போத்தனுர் பகுதியில் உள்ள பாரத் நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் இன்னும் சில இடங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கோவில் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பொதுமக்கள் பயன்படுத்தாத இடத்தை தேர்வு செய்து, அன்றைய குறிச்சி நகராட்சி தலைவர் நாகராஜின் ஒப்புதலுடன் 25 வருடங்களுக்கு முன்பு முத்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது.

தொடர்ந்து 20 வருடங்களாக திருவிழாக்களும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும், இது தனிநபருக்கு சொந்தமான கோவில் கிடையாதென்றும் இந்த கோவில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாரத் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் மற்றும் அவரின் குடும்பத்தார், அப்பகுதியைச் சேர்ந்த மக்களை சட்ட விரோதமாக கட்டாய மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுவதாகவும், மேலும் முத்து மாரியம்மன் கோவில் இதற்கு இடையூறாக இருப்பதால் அக்கோவிலை அகற்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுத்து மக்கள் தொடர்ந்து வழிபட வழிவகை செய்துதரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...