வால்பாறையில் மழை நீர் பேருந்துக்குள் வந்ததால் பயணிகள் குடை பிடித்து பயணம்.!!

வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடு வருகிறது. கூழாங்கல் ஆறு பகுதியில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.



இதனால் பயணிகள் அதிக சிரமப்பட்டனர். வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது.



இதனால் இது போன்ற மழையில் ஒழுகும் நிலையில், உள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...