திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்-‌ மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு.!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ தூய்மைப்பணியாளா்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.



வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை எனத் தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌. மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

பொதுமக்கள்‌ மற்றும்‌ வணிகர்கள்‌ திறந்தவெளியில்‌ குப்பையைக் கொட்டக்‌ கூடாது மீறினால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி அபராதம்‌ விதிக்க வேண்டும்‌. இதனை மாநகராட்சி உதவி ஆணையர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்‌.

மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணவினை ஏற்படுத்திட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌.

அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ வருகின்ற 23.10.2021 அன்று நடைபெறும்‌ மெகா தடுப்பூசி முகாமில்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவித்தார்‌.



மேலும்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர் பகுதிகளில்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதைப் பார்வையிட்டு,



அவினாசி சாலை, உப்பிலிபாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி கட்டணக்‌ கழிப்பிடத்தின்‌ சுகாதாரம்‌ குறித்து ஆய்வு செய்து அங்குச் சுத்தம்‌ செய்யப்படுவதைக் கணக்கிடுவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஸ்வச்‌ பாரத்‌ வில்லைகளை (STICKERS) பார்வையிட்ட பின்னர்‌,



உப்பிலிபாளையம்‌ சிக்னல்‌ பகுதியில்‌ சென்டர் மீடியம்‌, சாலையின்‌ இடது, வலது பக்கங்களில்‌ உள்ள பழுதுகளைச் சரிசெய்து இருபுறமும்‌ வண்ண செடிகள்‌ நட்டு பராமரிக்கவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா சம்மந்தப்பட்ட பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...