கிணத்துக்கடவு அருகே அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.


கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

அதிமுக பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.வேலுமணி வழிகாட்டுதலோடு இன்று கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் அண்ணா நகரில் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அங்கு இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி மரியாதை செய்தார்.

இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, சிக்கலாம்பாளையம் கிளை செயலாளர் முத்துசாமி, அண்ணாநகர் கிளை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பிரபு, லட்சுமணன், தங்கராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...