வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு..!

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை தொடர்பாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை தொடர்பாகவும் மனு அளிக்கப்பட்டது.


கோவை: நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை சம்பந்தமாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை சம்பந்தமாகவும், தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களை அவரது சென்னை முகாம் இல்லத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் அவர்களுடைய தலைமையில், வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், உடன் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் GKM. மகுடீஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே. வீரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், மார்க்கெட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் Sp. சிவா, வடை கடை குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...