ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி கோவை தொழிலதிபரிடம் ரூ.22.81 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை

ஒரு கோடி கடன் தருவதற்கு ரூ.22.81 லட்சம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறி மோசடி செய்ததாக, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தமிழரசு (54) என்பவர் குற்றச்சாட்டு.

ஒரு கோடி கடன் தருவதற்கு ரூ.22.81 லட்சம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறி தன்னை ஒரு நபர் மோசடி செய்ததாக, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தமிழரசு (54) என்பவர் கோவை சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் அருகேயுள்ள, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் தமிழரசு (54). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில்

கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக லாரி ஒர்க் ஷாப் தொழில் செய்து வருகிறேன். கடந்த மே மாதம் எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர், எனது தொழிலின் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வரை கடன் வழங்குவதாக கூறினார்.

முதலில் கடன் வாங்க வேண்டாம் என நினைத்திருந்த நான், தொடர்ந்து அந்த நபர் வற்புறுத்தியதால், வேறு வழியின்றி கடன் பெற முடிவு செய்தேன். இதைத் தொடர்ந்து அந்த நபர், ரூ.22.81 லட்சம் தொகையை முன்வைப்புத் தொகையாக செலுத்தினால், ரூ.1 கோடி கடன் தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம், என்றார். மேலும், முன்வைப்புத் தொகையை ஆன்லைன் மூலம் விரைவாக கட்டவில்லை என்றால், கடன் தொகையை பெற முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நான் அந்த நபர் கூறியபடி ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 879 தொகையை ஆன்லைன் மூலம், அவருக்கு அனுப்பி வைத்தேன். தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் பணம் வராததால், சந்தேகமடைந்த நான், அந்த நபர் கூறிய எண்ணைத் தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, நான் அந்த நபர் கூறிய நிறுவனத்துக்கு நேரில் சென்று விசாரித்த போது, அப்படி ஒருவர் அங்கு வேலை செய்யவில்லை எனத் தெரிய வந்தது. நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை பெற்று மோசடி செய்தது அதன் பின்னரே தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, மாநகர சைபர் கிரைம் போலீஸார், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது மோசடி பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...