கிணத்துக்கடவில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் பதவியேற்பு.!!

கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் மகேந்திரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நெ.10முத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.



தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மணி முன்பு வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.



பதவியேற்றுக் கொண்ட மகேந்திரனுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...