அரசு ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என திருப்பூரில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: அரசு ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என திருப்பூரில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிஐடியு மாநிலக்குழு கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலையில், உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் கடந்த 2-தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற் சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சௌந்தரராஜன் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க நிறுவனங்கள் மறுத்து வருவதாகவும் இதில் அரசு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு 676-ரூபாய் குறைந்தபட்ச கட்டணம் என்பது அரசாணையில் உள்ள சூழ்நிலையில் தற்போது 391-ரூபாய் மட்டும் என்பது அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும், ஏற்கனவே அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த 20-சதவீத போனசை குறைத்து 10-சதவீதமாக வழங்கியதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 20- சதவீத போனஸ் வழங்க வேண்டும் எனவும் அதனைத் தீபாவளி பண்டிகைக்கு 15-தினங்களுக்கு முன்பாக கண்டிப்பாக வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
திருப்பூரில் பெண்களுக்கு வார விடுமுறையைக் கட்டாயமாக்கி உறுதி செய்திட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்க விசாகா கமிட்டி அமைத்துத் தர வேண்டும் எனவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். அது வரையில் மதுவினால் வரும் வருமானத்தில் 5-சதவீதத்தை விழிப்புணர்வு மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கத் தேவையான மருத்துவ உதவிக்காகச் செலவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.