திவான்சாபுதூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கலைவாணி சிலம்பரசன் பதவியேற்பு.!!

திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவியேற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 25-ஆண்டு பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்ததால், மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டு 2297-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து அவர் இன்று திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவி ஏற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இருபத்தி ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்தது.

மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி தேவி தர்மராஜ், மாணிக்கவேல், ராஜகாளியம்மன் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...