வால்பாறையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறை ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு.!!

வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


வால்பாறை: வால்பாறை வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறை ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாகும், நேற்று இரவு வால்பாறையிலிருந்து அக்கா மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் அரசு பேருந்து செல்லும் போது பேருந்திலிருந்த பயணிகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தையைக் குட்டி சாலையில் செல்வதைக் கண்டனர்.

இரவு நேரம் என்பதால் பயணிகள் வனத்துறை ஊழியர் முத்துராஜ் என்பவருக்குத் தகவல் அளித்ததன் பேரில் வந்த முத்துராஜ் சாலையிலிருந்த சிறுத்தை குட்டியை மீட்டு அடர் வனப் பகுதிக்குச் சென்று குட்டியை விட்டுள்ளார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...