கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம்ஒப்படைத்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் திருடப்படுவதாக மாவட்ட சைபர் செல் போலீஸில் புகார்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாயமான செல்போன்களை கண்டறிய தனிக்கவனம் செலுத்தப்பட்டுத் தேடிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 125-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின் நிலுவையிலிருந்த 300-க்கு மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடந்த நிலையில் மேலும் 141- செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் செல்லும் இடங்கள், பேருந்துகள் மற்றும் பிட்பாக்கட் மூலம் செல்போன்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகார்கள் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
இதில், மாயமான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இம்மாதிரி மாயமாகும் செல்போன்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மேலும் செல்போன்களை திருடிச் செல்லும் நபர்கள் பொய்யான காரணங்களைச் சொல்லி கடைகளில் விற்றுச் செல்கின்றனர்.
எனவே செல்போன் கடை உரிமையாளர்களிடம் சில வழிமுறைகளைக் கூறி உள்ளோம். பொதுமக்கள் இம்மாதிரி செல்போன் மாயமானால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் மற்றும் செல்போன்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.