வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரிப்பு: மருந்து அடிக்கும் பணி தீவிரம்.!!

வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரிப்பால், நவீன இயந்திரங்கள் மூலம் கொசுவை அழிக்க மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. காலை, மதியம், மாலை என்று மூன்று நேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


வால்பாறை:வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரித்ததால், நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது கடந்த ஒரு வாரக் காலமாகக் கன மழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக மேக மூட்டத்துடன் உள்ளது.

இதன் காரணமாக வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் பருவ நிலை உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளின் குருத்துகளைக் கொசுக்கள் தின்று நாசப்படுத்துகின்றன.

இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி வெகுவாக குறைகின்றது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியும் பாதிப்படைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொசுவை அழிக்க நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

காலை, மதியம், மாலை என்று மூன்றுநேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...