கோவையில் கடைக்கு வாடகை கொடுக்க முடியாததால் கடையை பூட்டி டெய்லர் தூக்குப்போட்டு சாவு.!!

மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் கடைக்கு வாடகை கொடுக்க முடியாததால் கடையைப் பூட்டி டெய்லர் கடைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகே டெய்லர் கடை நடத்தி வந்த நபர் கடை வாடகை கொடுக்க முடியாத காரணத்தினால் மன உளைச்சல் அடைந்து இன்று மதியம் கடையைப் பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறை மாரிசெட்டி தெரு பகுதியில் வசிப்பவர் திவாகர் வயது 55, இவருக்கு பிரீத்தா என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் போளுவாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே அம்மு என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் வேலை குறைவாக இருந்ததால் இரண்டு மாதங்களாகக் கடைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.

அதனால் கடந்த சில நாட்களாக தன்னுடைய மனைவி பிரீத்தாவிடம் கடை வாடகை கொடுக்க முடியவில்லை என புலம்பி மன உளைச்சலிலிருந்து உள்ளார்.



அவர் கடைக்கு மதியம் சென்றவர் கடையைப் பூட்டிக் கொண்டு டெய்லர் கடைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174-சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...