அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.
கோவை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதிகளில் அதிமுகவினர் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார்.

இதேபோல் கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ரோடு, அம்பேத்கர் வீதி, தேரோடும் வீதி, கிருஷ்ணசாமி புரம் ஆகிய பகுதிகளில் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. மேலும் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, மனோகரன், கண்ணம்மாள், லட்சுமணன், பிரபு, தங்கராஜ், கார்த்திகேயன், கோபால், அரவிந்த், வினுவெங்கடேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.