பொள்ளாச்சியில் கனமழையால் இடிந்து விழுந்த வீடு.!!

பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக கேரளப் பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக புது காலனியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழும் சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட சுகன்யா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டார்.



அப்போது வீடு இடிந்து தரை மட்டமானது.

இடிபாடுகளில் சிக்கிய 70-வயது முதியவர் சுப்பிரமணியை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர்.



வீடு இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...