கோவையில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் வியாபாரிக்கு குவியும் பாராட்டுகள்..!!

அந்த ஆசாமியிடம் இருந்து இரும்பு ராடு, கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை நீலாம்பூர் பகுதியில் வசிப்பவர் சித்திக் (32). இவர் சித்ரா ஜங்ஷனில் கம்ப்யூட்டர் சேல்ஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இது அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 4 மணி அளவில் சித்திக் தனது செல்போனை பார்த்தார். அவரது கடைக்குள் ஒரு ஆசாமி நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, உடனடியாக அதே பகுதியில் வசிக்கும், தனது நண்பரான, பிரபல ஆங்கில பத்திரிக்கை நிருபர் வில்சன் என்பவருடன் தொடர்பு கொண்டார். இவர்கள் இருவரும் காரில் சித்ரா வந்தனர்.

அப்போது அந்த ஆசாமி கடைக்குள் பணம் எதுவும் கிடைக்காததால் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு பஸ்சில் ஏறினார். இதைப்பார்த்த சித்திக்கும் வில்சனும் அவரை அடையாளம் கண்டு, காரை நிறுத்திவிட்டு அதே பேருந்தில் அவர்களும் ஏறினார்கள்.

பின்னர், பேருந்தில் வைத்து அந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த ஆசாமி தான் வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அவர்களை தாக்க முயன்றார். இருவரும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் அந்த ஆசாமி தனது பெயரை சரவணன் என்று கூறியுள்ளான். அவரிடம் இருந்து இரும்பு ராடு, கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே, கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பத்திரிக்கையாளர் வில்சன், வியாபாரி சித்திக் ஆகியோரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...