தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனாலோகு கோவை மாநகராட்சி கமிஷனரிடம் புகார்.!!

ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பணிபுரியக்கூடிய டாக்டர் அவருடைய தனியார் கிளினிக்கில் முழு கவனம் செலுத்துவதால், பேறுகாலத்திற்கு வரக்கூடிய பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

உடனடியாக அவரை மாற்றி புதிய டாக்டரை நியமிக்க வேண்டும் என திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிராஸ்கட் சாலையில் 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் அருகில் கோவை மாநகராட்சி சிடிஎம் ஹோம் மகப்பேறு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் பெண் டாக்டர் பெண் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப் பட்டு வந்த நிலையில், இந்த மருத்துவமனைக்குத் தற்காலிக பணி மாறுதலில் ஜீவானந்தம் என்ற ஆண் டாக்டர் இங்கு பணியில் சேர்ந்த பின்பு தனியார் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சரியாகத் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்காத காரணத்தால் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இப்போது ஒரு சில பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆகவே இந்த ஆண் மருத்துவரை மாற்றிவிட்டு மருத்துவமனைக்குத் திறமையான பெண் மருத்துவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...