அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு நகை பட்டறை ஓனர் தற்கொலை.!!

மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பெரிய கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 68, இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

அதனால் அவருக்கு மன உளைச்சலும் அதிகமானது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாக இல்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

நேற்று வீட்டிலிருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தகுமாரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் 174-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...