ஓடை வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் உடல் நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.
கோவை: ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனூர் குட்டைக்குச் செல்கிறது. இதில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழையால் இப்பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா (55) மற்றும் மூன்று பேர், நேற்று முன் தினம் தோட்ட வேலைக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக, அருகிலிருந்தவர்கள், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு 7:30 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.
தொடர் மழை, போதிய வெளிச்சமின்மையால், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னிலையில் மீண்டும் நேற்று காலை முதல் பெண்ணின் உடலைத் தேடும் பணி நடைபெற்றுத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஓடை மற்றும் குட்டையில் சுமார் 20-ஏக்கர் பரப்பளவு தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு உடலைத் தேடும் பணி நடைபெற்றது.

நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு விஜயாவின் உடல் சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.