கோவையில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்தவர் கைது.!!

செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த ரஃபேல் என்பவரின் மகன் பிரான்சிஸ்(49). டிரைவரான இவர் தெருவில் சுற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம்.

இதனால் இவரது வீட்டின் முன்பு எப்போதும் 15-முதல் 20-நாய்கள் உணவுக்காகக் காத்திருக்கும். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் முகமது உக்காசா(27). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

பக்கத்து வீட்டில் பிரான்சிஸ் நாய்களை வளர்த்து வருவது முகமது உக்காசாவுக்கு பிடிக்கவில்லை. ஒரு சில நேரங்களில் நாய்கள் ஆடுகளை கடித்து விடுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரத்திலிருந்து வந்த முகமது உக்காஷா தெருநாய்களுக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு சில நாய்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதை அறிந்த பிரான்சிஸ் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நாய்களுக்கு விஷம் வைத்ததாக முகம்மது உக்காவைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...