கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது..!

ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் கைது செய்தனர்.

கோவையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மாயன் (51), தேனி ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (49), கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (62) என்பதும் மூவரும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

இதேபோல, கஞ்சா விற்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயவீரன் (53), என்பவரை சாய்பாபா காலனி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...