கோவையில் தென்னை விவசாயத்தை காக்க பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: தென்னை விவசாயத்தை காக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தென்னையை பாதிக்கும் வாடல் நோய், கூன் வண்டு தாக்குதல், ஈயிரியோ பைட், வெள்ளை ஈ தாக்குதல், ஒரு நடனம் ஆகிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரு ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி தென்னையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம், இளநீர், ஆகிய தொழில் நிறுவனங்கள் முடக்குவதால் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுவதாக கூறினர்.

இந்த நிலையில், இதனை தவிர்க்க வேண்டும் எனவும், தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...