கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 19-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நீண்ட நாட்களாகச் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 19-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நீண்ட நாட்களாகச் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அண்ணாநகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளன. ஆகையால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.
தற்போது மழை பெய்து வருவதால் சாக்கடை நிரம்பி கழிவுநீர் மழை நீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ஆகையால், சாக்கடை நீர் உறிஞ்சும் கருவிகளை கொண்டு கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.