கோவையில் செல்போன் வெடித்து படுக்கையில் தீ பிடித்து கல்லூரி மாணவர் சாவு.!!

மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.


கோவை: மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57) .கூலி வேலை செய்துவரும் இவரது மகன் சிவராம் (18). சிவராம் கோவை புதூர் பகுதியில் உள்ள ஆதித்யா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார்.

சிவராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராம் குடிபோதையில் வீட்டில் தனது அறையில் படுத்து தூங்கினார். முன்னதாக செல்போனை சார்ஜ் போட்டு அதை தனது படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டார்.

நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்தது. அதில் சிவராம் படுத்து இருந்த படுக்கையிலும் தீப்பிடித்தது. சிவராம் குடிபோதையில் இருந்ததால் படுக்கையில் தீப்பிடித்ததை அவரால் உணர முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்து சிவராம் உடுத்தியிருந்த ஆடைகள் மற்றும் படுக்கை முழுவதும் தீ பரவியது.

அப்போது திடுக்கிட்டு சிவராம் எழுவதற்குள் சிவராம் உடலிலும் தீ பிடித்தது. அவரது சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிவராமுக்கு உடல் முழுவதும் அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவராம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மயில்சாமி மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...