வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடுமுழுவதும் அதிமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தொழிற்சங்க அலுவலகம் முன்புறம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ. அமீது புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் தொண்டர்கள் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். கட்சி உதயமான நாளை நினைத்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, அண்ணா திமுக கோவை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், மிக்சர் கடை முருகன், செந்தில் அண்ணா துரை, உருளிக்கல் கமாலுதீன், மாரிச்சாமி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.