டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 12-ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் 228-கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,200-குக்கிராமங்கள் உள்ளன. பொதுவாகக் கோவையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கும்.
ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதன்படி ஊராட்சிப் பகுதிகளில் பிரத்தியோக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் தொடங்கித் தொடர்ந்து சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஊராட்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கிராம ஊராட்சிகளில் அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம் சாலைகளைச் சுத்தப்படுத்துதல், சாக்கடைகளைத் தூர்வாருதல், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மஸ்தூர்கள் எனப்படும் இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.