கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கு அவசர கால மருத்துவ சிகிச்சை பயிற்சி..!!

இந்த திட்டத்தில் பிஎஸ்ஜி மருத்துவமனை பயிற்சி மதிப்பீடுகளின் வெளிப்புற மதிப்பீட்டாளராகவும் இணை சான்றளிப்பாளராகவும் செயல்படும்.



கோவை: சமூக பணியில் ஈடுபட்டு வரும் லாப நோக்கமில்லாத சமூக தொண்டு அமைப்பான ‘அலர்ட்’ அமைப்பு அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவதற்கான பயிற்சியை பொதுமக்களுக்கு அளிக்க பிரபல மருத்துவமனையான கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட்டு உயிரை காப்பது என்பது குறித்த பயிற்சியை அலர்ட் அமைப்பு வழங்க உள்ளது. பிஎஸ்ஜி குழும கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும் அவசர மருத்துவ மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக மறுதுவக்க இருதய தினமான அக்டோபர் 16-ந்தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருதய பிரச்சினை உள்ள ஒருவருக்கு தன்னிச்சையாக ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மாரடைப்பு ஏற்படும்போது உயிர்காக்கும் அவசர செயல்முறையான இருதய நுரையீரல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறப்பு விருந்தினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.ஸ். சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் தீபக் தாமோர், அத்வைத் லக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவி சாம் ஆகியோர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அலர்ட் தலைவர் வி.எம். முரளிதரன் மற்றும் பிஎஸ்ஜி குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் மற்றும் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பிஎஸ்ஜி மருத்துவமனை அலர்ட் உடன் இணைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும், அதாவது போலீஸ்காரர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், கடைக்காரர்கள், ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் ஆகியோருக்கு அவசர காலத்தில் ஒருவரின் உயிரை காப்பது எப்படி என்பது குறித்த பயிற்சி அளிக்க உள்ளது.

இந்த திட்டத்தில் பிஎஸ்ஜி மருத்துவமனை பயிற்சி மதிப்பீடுகளின் வெளிப்புற மதிப்பீட்டாளராகவும் இணை சான்றளிப்பாளராகவும் செயல்படும். இவை இரண்டும் இணைந்து அவசரகால கூட்டு பாடத்திட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.இந்த நிகழ்ச்சியில் கோவை நகர மக்களுக்கு உதவிடும் வகையில் அலர்ட் அமைப்பின் ‘கோல்டன் ஆர்மி’ என்ற திட்டம் துவங்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள தன்னார்வலர்களுக்கு அவசர காலத்தில் உரிய மருத்துவ உதவியை அளித்து உயிர்களை காக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அலர்ட் அமைப்பின் தலைவர் வி.எம். முரளிதரன் கூறுகையில், பிஎஸ்ஜி மருத்துவமனை போன்ற புகழ்பெற்ற மருத்துவமனையுடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவசர காலங்களில் உதவிடும் வகையில் சாதாரண மனிதர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் அமைப்பின் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அவசர காலங்களில் முதல் உதவி அளித்து ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஏபிஜே அப்துல் கலாம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவசர சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த இலக்கை அடையும் நோக்கில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது வரை நாங்கள் இந்தியா முழுவதும் 6 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை மேலாண்மை பற்றிய பயிற்சியை அளித்துள்ளோம். தற்போது பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் செய்துள்ள இந்த ஒப்பந்தம் இந்த பகுதியில் சேவை மனப்பான்மையுடன் முடிந்தவரை அதிகமான மக்களை சென்றடைய தேவையான உத்வேகத்தை எங்களுக்கு அளிக்கும். மருத்துவமனைகள் தவிர, அவசர காலத்தில் உதவிடும் ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மற்றும் அமலாக்க முகமைகள், அரசு அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பின் பிற சமூக சேவையாற்றும் நிறுவனங்களுடனும் எங்களின் அலர்ட் அமைப்பு இணைந்து பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து பிஎஸ்ஜி குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், விபத்துகள், காயங்கள் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படும்போது முறையாக வழங்கப்படும் முதலுதவி சிகிச்சையானது அவர்களின் உயிர்களைக் காப்பாற்றும். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் சுமார் 75 சதவீத இறப்புகளைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

இதில் நல்ல செய்தி என்னவென்றால், முதலுதவி மற்றும் மருத்துவ அவசரகால உதவிகளை சரியான பயிற்சி பெற்ற எவரும் செய்ய முடியும். இந்த சூழலில், அலர்ட் அமைப்பு மேற்கொண்டு வரும் பணி பெரும் பாராட்டுக்கு உரியது. அதன் பயிற்சித் திட்டங்கள் சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனித்துவமிக்க முதல் நபராக மாறுவதற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளன. முதலுதவி அளிப்பதில் அவர்களின் அணுகுமுறையானது சமூக மற்றும் உளவியல் ரீதியாக முழுமையானதாக இருப்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். 

எங்கள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக இந்த திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அலர்ட் அமைப்புடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். மேலும் மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதலுதவி சேவையை விரிவுபடுத்த அலர்ட் அமைப்பு மெற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் எங்களால் முடிந்த பங்களிப்பை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்கள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இதை எடுத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.

அலர்ட் அமைப்பு அதன் ‘அவசரகால சிகிச்சைக்கு தனிப்பட்ட அதிகாரமளித்தல்’ என்னும் திட்டத்தின் கீழ் அடிப்படை, மேம்பட்ட, தீவிர பயிற்சிகளை வழங்குகிறது. இதேபோல் அலர்ட் வாய்ஸ் என்னும் திட்டம் மொபைல் செயலி மூலம் செயல்படுகிறது. இதில் முதலுதவி அளிப்பவர்களின் விவரங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் எவரும் இந்த எண்களை தொடர்பு கொண்டு முதலுதவி பெறலாம்.

அலர்ட்டின் ‘கோல்டன் ஆர்மி’ முக்கியமான தருணத்தில் மருத்துவ உதவிகளை வழங்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. முதல் 60 நிமிடங்களில் தேவையான எந்தவிதமான முதலுதவியையும் அளிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...