பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, வேட்டைக்கார சாமியின் கண்களை கட்டி, குதிரையில் சாமியை எடுத்து சென்று மலைக்கோவிலில் வைத்து கண்திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மழை வேண்டி அவர்கள் வணங்கும் காவல் தெய்வமான வேட்டைக்காரன் கோவிலில் பாரம்பரிய திருவிழா நடைபெறும்.
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த இவ்விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, குதிரை வாகனத்தில் வேட்டைக்கார சாமியை மண்சிலை வடிவத்தில் அவர்களது குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் இருந்து மலைப்பகுதியில் உள்ள வேட்டைக்காரன் கோவில் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் விழா நடைப்பெற்றது.

முன்னதாக, மலைவாழ் மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, வேட்டைக்கார சாமிக்கு அருள் வரவழைத்து மேல் தாளத்துடன், பட்டாசு வெடித்து, அழைத்து சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில், குதிரையில் வேட்டைக்கார சாமியை எடுத்து சென்று மலைக்கோவிலில் வைத்து கண்திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதைத்தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து நாளை கிடா வெட்டி ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்து வைக்கும் நிகழ்வு
நடைப்பெறவுள்ளது. மலைவாழ் மக்கள் நடத்திய இந்த பாரம்பரிய விழாவில் வனத்துறையினர் பங்கேற்று சிறப்பித்தனர்.