கோவையில் இருவேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் 9 பவுன் நகை கொள்ளை..!!

இதில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆசிரியையிடம் 2 பவுன் மற்றும் ஏடிஎம் கார்டு உட்பட பொருட்களையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் 2வது வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெற்றிவேல் (55). இவரது மனைவி சந்தானம் (50). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு சந்தானம் கடையில் இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் சந்தானத்தின் கழுத்திலிருந்த ஏழு பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த சந்தானம் சத்தம் போட்டார். இருப்பினும் இருவரும் தப்பினர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரம் வந்து அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.

இந்த நிலையில், மர்மநபர்கள் கவுரி மனோகரியின் பர்ஸை திருடிச் சென்றனர். பர்சில் இரண்டு பவுன் செயின், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன.

பின்னர், இது குறித்து கவுரிமனோகரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...