தந்தை பெரியார் குறித்து யூடியூபில் அவதூறு பரப்பியவர் கைது..! உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு கு. ராமகிருஷ்ணன் பாராட்டு..!!

உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசிய சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபகாலமாக தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்க தலைவர்களை பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழிய பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் சீதையின் மைந்தன் என்கிற நபர் 'ழகரம் வாய்ஸ்' யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று தந்தை பெரியாரைப் பற்றியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றியும் இழிவுபடுத்தி, மிகவும் கீழ் தரமாக பேசியது தொடர்பாக, சீதையின் மைந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகர காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு காவல்துறையினர் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறு பரப்பிய சீதையின் மைந்தன் என்கிற நபரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...