வீட்டின் சுவர் மீது ஏறி முருங்கைக்காய் பறித்தவர் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து மூச்சுத்திணறி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை அருகே சூலூரில் வீட்டின் சுவர் மீது ஏறி முருங்கைக்காய் பறித்துக் கொண்டிருந்தவர் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து மூச்சுத்திணறி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, சூலூர் காங்கேயம்பாளையம் பழைய போஸ்ட் ஆபீஸ் வீதி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார்(52). இவர் கூலி தொழிலாளி.
இவர் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் அருகே செப்டிக் டேங்க் மேலே நின்று முருங்கைக் காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செப்டிக் டேங்க் உள்ளே செந்தில்குமார் தவறி விழுந்தார்.
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்க முயன்ற போது மீட்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் மூச்சுத்தணறி உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.