கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்தனர்.
கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியைச் சேர்ந்தவர் தர்மா வயது 37, கூலி தொழிலாளி. நேற்று மாலை இவர் தனது மொபட்டில் வடவள்ளி ரோட்டில் சென்றார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியைச் சேர்ந்த சடையப்பன் என்பவரின் மகன் கார்த்திக் (33). லாரி டிரைவரான இவர் தனது நண்பர்களான குப்புராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (24) மற்றும் மணிகண்டன் என்பவரின் மகனான மணிவாசகம்( 33) ஆகியோருடன் பைக்கில் செட்டி பாளையத்தில் இருந்து வடசித்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கை ஓட்டி வந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பைக்கில் அமர்ந்திருந்த கார்த்திக் (24) மற்றும் மணிவாசகம் (33) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கிடந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த செட்டி பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்த கோவை வேலாண்டிபாளையம் பழனி கோனார் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் (21) என்ற டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.