கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.!!

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளங்கரையில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடையை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளங்கரையில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடையை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளாங்கரை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.



இதேபோல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் கால்வாய் பணிகளையும் பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கிவைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய கழக பொருளாளர் சண்முகம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...