மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செல்வபுரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் யுவா என்கிற யுவராஜ் (26) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100-கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல ஆர்எஸ் புரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பசுவண்ணன் கோவில் வீதி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், கே.கே.புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி ஷகிலா (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 200- கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.