தொண்டாமுத்தூர் அருகே பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் உள்ள புளிய மரத்தில், துாக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கண்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சடலத்தின் அருகில் இருந்த ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் உயிரிழந்தவர் திருப்பூரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.