பருவமழை காலத்தில் அதிக அளவு மின் விபத்துகள் ஏற்படும். இடி மின்னலின் போது உடனடியாக காங்கிரீட் கூரைகளால் ஆன பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், வேன், போன்றவற்றில் தஞ்சமடையலாம்.
கோவை: பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வேவெப்பச்சலனம் காரணமாக தற்போது கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை காலத்தில் அதிக அளவு மின் விபத்துகள் ஏற்படும். இந்த மின் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு விளக்கமளித்து கோவை தெற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியுள்ளதாவது:-
தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி அல்லது மின்னலின் போது மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது பாதுகாப்பானது.
இடி மின்னலின் போது உடனடியாக காங்கிரீட் கூரைகளால் ஆன பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன், போன்றவற்றில் தஞ்சமடையலாம்.
குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது. இடி இடிக்கும் போது டிவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் தொடர்பை துண்டிக்க வேண்டும்.
அத்துடன் இடி மின்னலின் போது வீட்டின் ஜன்னல் கதவு போன்றவற்றின் அருகில் நிற்க கூடாது. சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகில் நிற்கக் கூடாது.
மின்மாற்றியில் பீஸ் போய் இருந்தால் அதை சரி செய்ய மின் வாரிய ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்மான பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மின்சாரத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனடியாக காலணி அணிந்து மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். இடி அல்லது மின்னலின் போது தஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக நிற்கவேண்டும்.
இடி மின்னலின் போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடாமலும், மிதிக்காமல் இருக்கவும். இது குறித்து உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், மழை பெய்யும்போது கேபிள் டிவி ஒயர்களை தொடக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.