கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்..!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மகப்பேறு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் இ. சந்திரா கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள், செவிலியா் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவையில் தற்போது நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றாா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...