திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி மாதம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பாக கார்த்திக் ராஜா, தி.மு.க.சார்பாக சிவப்பிரகாஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் உதய குமார் ஆகியோர் என 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்தம் 447 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில்,174 ஆண்கள், 187 பெண்கள் பேரும் என மொத்தம் 361 பேர் வாக்களித்தனர். 81 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுப்பெட்டி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பலத்த பாதுகாப்புடன் காலை, 8:00 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்றது.

இதில் மாதம்பட்டி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.