5 மாவட்டங்களில் ரத்த மாதிரிகள் சேகரித்து நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் ஆய்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 71 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் பரவியுள்ள விதம் குறித்து கண்டறிய பொது சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நபர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
முதல் கட்ட ஆய்வு 2020ம் ஆண்டு நவம்பரிலும், இரண்டாம் கட்ட ஆய்வு 2021ம் ஆண்டு ஏப்ரலிலும், மூன்றாம் கட்ட ஆய்வு கடந்த ஆகஸ்ட்டிலும் நடைபெற்றது.
இதில் மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஈரோட்டில் 37 சதவீதம், கோவையில் 43 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், அதிக அளவில் நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் காணப்பட்ட முதல் 5 மாவட்டங்கள், குறைவாக நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் காணப்பட்ட கடைசி 5 மாவட்டங்களில் மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரித்து நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் ஆய்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்டத்தில் 71 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.