கல்லூரிக்கு முதல் நாள் செல்ல இருந்த நிலையில், படுக்கையில் இருந்து மாணவர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கோவை: கோவையில் கல்லூரி மாணவர் படுக்கையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் கலைவாணர் (20). பிளஸ் 2 முடித்தவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று கல்லூரிக்கு முதல் நாள் செல்ல இருந்த நிலையில், நேற்று முன்தினம் படுக்கையில் இருந்து மாணவர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. உடனடியாக மாணவனை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால், அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த மர்ம மரணம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.