பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சந்தோஷ் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை..!

சந்தோஷின் பெற்றோர் மற்றும் அவரது நண்பரிடமும் NIA போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தேடப்பட்டு வந்த பெரும் மாவோயிஸ்ட் சந்தோஷ் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் (NIA) தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக அவரது தந்தை அர்ஜூனன் ஆழியாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் இது தொடர்பாக கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம், நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, சந்தோஷின் பெற்றோரிடம் அவரை சரண் அடையுமாறு தெரிவித்துள்ளனர். மேலும், சந்தோஷின் நண்பரிடமும், NIA போலீசார் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கலக்குறிச்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...