உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார், வேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா உட்பட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது.
கோவை: கரும்புக்கடை பகுதியில்தடைசெய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த ஒருவரைகாவல்துறையினர், மடக்கிப் பிடித்தனர். கடத்தலுக்கு,பயன்படுத்திய வாகனத்தையும் பதிமுதல் செய்தனர்.
சமீபத்தில், கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிபறி, கொள்ளை, மற்றும்போதைபொருள் புழக்கம் அதிகரித்து வருவதையடுத்து, கோவை மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோவை சுந்தராபுரம் பகுதியிலிருந்து கரும்புக்கடைபகுதியை நோக்கி "டாட்டா ஏஸ்" என்ற சிறியரக சரக்கு வாகனம் அதிவேகமாக வருவதாக, கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கரும்புக்கடை பகுதியில், உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார், அந்த வாகனத்தை எதிர்நோக்கி உஷார் நிலையில் காத்திருந்தனர். அப்போது, சிறிது நேரத்தில் வேகமாக வந்த அந்த சரக்கு வாகனத்தை, போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்தவுடன், வாகனத்தை ஓட்டிவந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், வாகனத்தை சோதனை செய்ததில்,தடைசெய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா உட்பட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது. அதன் மதிப்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம், என கூறப்படுகிறது.
மேலும், பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணைநடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு பின்பு தான், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் எங்கிருந்துகொண்டு வரப்பட்டது?இதன் பின்னனியில் யார் உள்ளனர்? என்ற தகவல்கள் வெளிவரும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும்,கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு கணக்கிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.