கோவையில்  தடை செய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தவரை மடக்கி பிடித்த உக்கடம் காவல்துறையினர்.

உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார்,  வேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா உட்பட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது.



கோவை: கரும்புக்கடை பகுதியில்தடைசெய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த ஒருவரைகாவல்துறையினர், மடக்கிப் பிடித்தனர். கடத்தலுக்கு,பயன்படுத்திய வாகனத்தையும் பதிமுதல் செய்தனர்.

சமீபத்தில், கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிபறி, கொள்ளை, மற்றும்போதைபொருள் புழக்கம் அதிகரித்து வருவதையடுத்து, கோவை மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று கோவை சுந்தராபுரம் பகுதியிலிருந்து கரும்புக்கடைபகுதியை நோக்கி "டாட்டா ஏஸ்" என்ற சிறியரக சரக்கு வாகனம் அதிவேகமாக வருவதாக, கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்துள்ளது. 



இதனையடுத்து, கரும்புக்கடை பகுதியில், உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார், அந்த வாகனத்தை எதிர்நோக்கி உஷார்  நிலையில் காத்திருந்தனர். அப்போது, சிறிது நேரத்தில் வேகமாக வந்த அந்த சரக்கு வாகனத்தை, போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்தவுடன், வாகனத்தை ஓட்டிவந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.



பின்னர், வாகனத்தை சோதனை செய்ததில்,தடைசெய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா உட்பட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது. அதன் மதிப்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம், என கூறப்படுகிறது.

மேலும், பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணைநடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு பின்பு தான், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் எங்கிருந்துகொண்டு வரப்பட்டது?இதன் பின்னனியில் யார் உள்ளனர்? என்ற தகவல்கள் வெளிவரும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும்,கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு கணக்கிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...