கோவையில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி-கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தகவல்.!!

தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம் தான் நாடு முழுவதும் கொரோனா காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போடப்பட்டது.

கேரளப் பகுதிகளிலிருந்து கோமாரி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள முள்ளி, ஆனைகட்டி, மேல்பாவி, வேலன் தாவளம், வாளையாறு உள்ளிட்ட இடங்களைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே கையிருப்பிலிருந்த தடுப்பூசிகளைக் கொண்டு 7-ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பவர்கள் மழைக்காலங்களில் நோய் தொற்று வராமல் கவனமாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள புல்தரையில் மாடுகளை மேய விட கூடாது. மழை பெய்யும்போது மரத்தடியில் கட்டிப் போடக் கூடாது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...