கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, நோய்த் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இதனால் தற்கொலை எண்ணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இது போன்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டெடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக உளநல மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தை தொடர்புகொள்பவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் தேவையான ஆலோசனைகளை அளித்து தற்கொலை எண்ணம், மன இறுக்கத்திலிருந்து வெளியே கொண்டு வருகின்றனர்.
பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த சமூக உளநல மையத்துக்கு இதுவரை 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. பல்வேறு காரணங்களால் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்தவர்கள், அமைதியை இழந்தவர்கள் சமூக உளநல மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றனர்.