சோனியா, ராகுல் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு..!

காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் சீமான் வன்முறையை தூண்டும் விதத்திலும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.



கோவை: சோனியா, ராகுல் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயூரா ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50 -க்கும் மேற்பட்டோர் இன்று கோவை காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தனர். 



பிறகு மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,

நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து அவர் பேட்டி அளிக்கும் பொழுது, காங்கிரஸ் கட்சியினர் அன்னையாக நினைக்கக்கூடிய சோனியா காந்தியையும், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர் வன்முறையை தூண்டும் விதத்திலும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...