கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

கல்லாங்காடுபுதூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது கோவையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.


கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா சாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநரான சின்னசாமி. இவருக்கு தீபக் (25)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் தீபக் கிணத்துக்கடவு அடுத்து கல்லாங்காடுபுதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள ரோட்டில் இடைவெளியில் தீபக் இருசக்கர வாகத்தில் ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் கோவையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.



இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தீபக் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார், தீபக் உடலை மீட்டு ஆம்புலன்சிஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காரை ஓட்டி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது அந்த நபர் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (46) என்பதும், அவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் பொள்ளாச்சி செல்வதற்காக தனது தாய், மனைவியுடன் பொள்ளாச்சிக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் உள்ளவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...