கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

மேலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drug என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த R. பன்னீர்செல்வம்@ நாகராஜ் (41) மற்றும் K. கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் இருவரிடமும் சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...