தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்.!!

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய சம்பளத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் மூலம் வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பப் படுகிறது.

தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதில் எவ்வித உடன்பாடு எட்டப்படாத நிலையிலிருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் வருகின்ற 16-ஆம் தேதி டாட்டா குரூப் ஆபீஸ் முன்புறம் தொழில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ அமீது, ஐஎன்டியூசி கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ முருகன், மதிமுக கல்யாணி, எல் பி எஃப் வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில், செல்லமுத்து இ.கம்.மாணிக்கம் உட்படத் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...