அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: திருப்பூரில் பா.ம.க சார்பில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கல்.!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி மற்றும் டி.கே.டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், டி.கே.டி பேருந்து நிறுத்தம் பகுதியில்கட்சிக் கொடி ஏற்றப்பட்டது உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர்,தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணை அமைப்புச் செயலாளர் பனங்காட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...